• Breaking News

    யாழில் இராணுவத்தினரின் நடமாடும் தடுப்பூசி வழங்கல் திட்டம் ஆரம்பம் - 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வீடுகளிலேயே தடுப்பூசி!

     நாட்டில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து இருக்கும் இந்த நிலையில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இராணுவ மருத்துவப் பிரிவினர் நடமாடும் covid-19 தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

    இராணுவத்தின் 512வது பிரிகேட் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வீடுகளுக்கு சென்று கொரோனா தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் இத்திட்டம் இன்று காலை யாழ். போதனா வைத்தியசாலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

    ஏற்கனவே நாடு பூராகவும் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடமாடும் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டமானது யாழ். மாவட்டத்தில் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

    இதன் ஆரம்ப நிகழ்வில் யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கொடித்துவக்கு, யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்,  வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி, மற்றும் சுகாதாரப் பிரிவினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.





    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad