• Breaking News

    60 வயது நடிகருக்கு ஜோடியாக நடிக்கவுள்ள நடிகை காஜல் அகர்வால்! யாருடன் தெரியுமா?

     தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கியவர் தான் நடிகை காஜல் அகர்வால், இவர் தென்னிந்தியளவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார்.

    மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் கெளதம் என்பவரை திருமணம் செய்துகொண்டார், திருமணத்திற்கு பின்னரும் காஜல் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

    அந்த வகையில் ஆச்சார்யா, இந்தியன் 2, பாரிஸ் பாரிஸ் உள்ளிட்ட திரைப்படங்கள் இவர் நடிப்பில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இவர் நடிப்பில் லைவ் டெலிகாஸ்ட் என்ற வெப் சீரிஸூம் வெளியாகியிருந்தது.

    இந்நிலையில் தற்போது நடிகை காஜல் அடுத்ததாக நடிகர் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படத்தின் புதிய அறிவிப்பு போஸ்டர் ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad