சீதுவையில் 650 தொன் சீனி சிக்கியது!
நுகர்வோர் விவகார அதிகார சபையில் பதிவு செய்யாமல் சீதுவை பகுதியில் உள்ள இரண்டு களஞ்சியங்களிலிருந்து 6 இலட்சத்து 50 ஆயிரம் கிலோ கிராம் (650 தொன்) சீனியை நுகர்வோர் விவகார அதிகார சபை இன்று கைப்பற்றியுள்ளது.
இலங்கை விமானப்படை உளவுத்துறைக்குக் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து, நுகர்வோர் விவகார அதிகார சபை இரண்டு களஞ்சியங்களையும் சோதனையிட்டபோது, இரண்டு களஞ்சியங்களின் முகாமையாளர்கள் கைது செய்யப்பட்டதுடன், சீனியும் கைப்பற்றப்பட்ட்டுள்ளது.
இரண்டு களஞ்சியங்களுக்கும் சீல் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாந்த திஸாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் கொழும்பு மாவட்ட புலனாய்வு பிரிவின் தலைவர் பிரதீப் களுதரஆராச்சி உள்ளிட்ட அதிகாரிகள் குழு இந்த சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை