• Breaking News

    ஊரடங்கு உத்தரவை மீறிய 718 பேர் கைது!

     இன்று காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் 718 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    அத்துடன், 13 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

    அதற்கமைய, தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் கடந்த ஒக்டோபர் முதல் இதுவரை 61,006 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதேவேளை, மேல் மாகாணத்தின் எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள 13 வீதிச் சோதனை சாவடிகளில் மேல் மாகாணத்துக்குள் பிரவேசித்த 2,082 வாகனங்கள் சோதனையிடப்பட்டுள்ளன.

    அத்துடன், மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறிய 1,258 வாகனங்கள் சோதனையிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad