மாஸ்டரில் 80 கோடி! இந்த படத்தில் தளபதி விஜய்யின் சம்பளம் இத்தனை கோடியா? சூப்பர் ஸ்டாரையே மிஞ்சிட்டாரு!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். கோடிக்கணக்கான ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வரும் விஜய் பிகில், மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் நெல்சன் திலீப்குமாருடன் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்.
அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே பல வருடம் கழித்து தமிழில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்துள்ள நிலையில் தளபதி66 படத்தின் அறிவிப்பு வெளியாகி ரசிகர்களுக்கு டிரீட் கொடுத்துள்ளார். தளபதி66ல் இயக்குநர் வம்சி இயக்கி பிரபல தெலுங்குபட தயாரிப்பாளர் தில்ராஜூ தயாரிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியது.
இந்நிலையில் இப்படத்திற்காக தளபதி விஜய் சுமார் ரூபாய். 120 கோடி சம்பளமாக வாங்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. இதன்மூலம் தென்னிந்திய சினிமாவில் அதிக கோடிகளை சம்பளமாக பெரும் நடிகர் என்ற அந்தஷ்த்தை பெறுகிறார் நடிகர் விஜய்.
கருத்துகள் இல்லை