• Breaking News

    ஊடக மாணவன் நிலக்சனின் 14வது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

    யாழ். பல்கலைக்கழக ஊடக மாணவனும் ஊடகவியலாளருமான சகாதேவன் நிலக்சனின் 14வது ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்றது.


    இவர் யாழ். பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையில் கல்வி பயின்று கொண்டிருந்த காலத்தில் ஊடகவியலாளராகவும் கடமையாற்றினார். இந்தநிலையில் கடந்த 2007ஆம் ஆண்டு 8ம் மாதம் முதலாம் திகதி அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 

    அவருடைய நினைவு தினம் இன்று யாழ். ஊடக அமையத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. அங்கு அவருடைய திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தி நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.




    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad