தடுப்பூசி பெறாதவர்களுக்கு இரண்டு மடங்காக அதிகரிக்கப்படும் பேருந்து கட்டணம்!
குறைந்தபட்சம் ஒரு அளவு கோவிட் தடுப்பூசிகளைப் பெறாத பயணிகளுக்கான கட்டணம், தனியார் பேருந்துகளில் இரட்டிப்பாக அறவிடப்படும் என்று இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாளை, ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் பொது போக்குவரத்து சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து கருத்து தெரிவித்த, இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனை குறிப்பிட்டுள்ளார்.
30 அகவைக்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்துக்குள் நுழையும் போது தடுப்பூசி அட்டையின் நகலை வழங்க வேண்டும் என்று விஜேரத்ன குறிப்பிட்டார்.
அவர்கள் தடுப்பூசி சான்று வழங்கத் தவறினால், அவர்கள் இருமடங்கு கட்டணத்தை செலுத்த வேண்டி ஏற்படும் என்று அவர் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையை அமுல்படுத்த அனுமதி கோரி தாம், ஜனாதிபதி மற்றும் போக்குவரத்து அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளதாக கெமுனு குறிப்பிட்டார்.
கருத்துகள் இல்லை