பேருந்து ஆசனத்திலேயே உயிரிழந்த பெண்!
ஹொரண பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றினுள் பெண்ணொருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.
ஹொரணையில் இருந்து பாணந்துறைக்கு இன்று மாலை பேருந்தில் பயணித்த பெண் ஒருவர் தனது ஆசனத்தில் இருந்தவாரே உயிரிழந்துள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
ஆசனத்தில் அமர்ந்தவாறு நித்திரை கொள்ளும் விதமாக இருந்த பெண் மீது நடத்துநருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, குறித்த பெண்ணை நித்திரையிலிருந்து எழுப்ப நடத்துநர் முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண்ணிடமிருந்து எந்தவித அசைவுகளையும் அவதானிக்காத நடத்துநர், பெண்ணை அதே பேருந்தில் அழைத்து வந்து, பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
எனினும், வைத்தியசாலையில் அனுமதித்த தருணத்தில், அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 60 அல்லது 65 வயதிற்குட்பட்ட அந்த பெண் பற்றி தகவல் எதுவும் கிடைக்கவில்லை தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பெண் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்காத நிலையில், பாணந்துறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை