திடீரென மயங்கி விழுந்த நான்கு பொலிஸார்
குருணாகல் வாரியபொல பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரிகளுக்காக இன்று நடத்தப்பட்ட ஆலோசனை வகுப்பின் போது திடீரென சுகவீனமுற்ற நான்கு அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் இந்த ஆலோசனை வகுப்பை நடத்திக்கொண்டிருந்த நிலையில் வகுப்பில் கலந்து கொண்ட இரண்டு பொலிஸ் அதிகாரிகள் திடீரென மயங்கி விழுந்துள்ளனர்.
இதனையடுத்து மேலும் இரண்டு பொலிஸ் அதிகாரிகளுக்கு இதேபோன்று ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து இந்த நான்கு அதிகாரிகளும் சிகிச்சைக்காக வாரியபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் அங்கு நடத்தப்பட்ட என்டிஜன் பரிசோதனையில் நான்கு பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதியாகியுள்ளது.
வாரியபொல வைத்தியசாலையில் சேவையாற்றும் மேலும் பொலிஸாருக்கு சளி மற்றும் இருமல் இருப்பதால், அவர்கள் அனைவருக்கும் என்டிஜன் பரிசோதனை நடத்தப்படவுள்ளதாக பிரதேச சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை