மனைவிக்கு கொவிட் தொற்று! - நாட்டை விட்டு சென்ற கணவன்
கர்ப்பிணி மனைவிக்கு கோவிட் -19 தொற்று ஏற்பட்டதால் வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்ட ஒருவர் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
கேகாலை சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் இவ்வாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த நபர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல மாதங்களுக்கு முன்பு குறித்த நபர் நாடு திரும்பியிருந்த நிலையில் துபாயில் கடமையாற்ற வேண்டியிருந்ததால் அவர் நாட்டை விட்டு வெளியேற நேர்ந்ததாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை