வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளர் கொரோனாக்கு பலி!
வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளர் கருணானந்தராசா அவர்கள் கொரோனா தொற்றுக்கு இலக்காகி இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
இதுதொடர்பாக மேலும் தெரிய வருகையில்,
இவர் மரணச்சடங்கு ஒன்றுக்கு சென்றுள்ள நிலையில் இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ள நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்றைய தினம் (2021.08.11) உயிரிழந்துள்ளார்.
கருத்துகள் இல்லை