ஊரடங்கு தொடர்பில் இராணுவ தளபதி வெளியிட்டுள்ள மற்றுமொரு அறிவிப்பு!
இன்று இரவு 10 மணி முதல் எதிர்வரும் 30ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
எனினும், குறித்த காலப்பகுதியில் அனைத்துவிதமான அத்தியாவசிய சேவைகளான மருந்து உற்பத்தி மற்றும் விநியோகம், விவசாயம், ஆடைக் கைத்தொழில் ஆகியவற்றை எவ்வித இடையூறுமின்றி முன்னெடுக்க முடியும்.
இதேவேளை, 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பிரஜைகளுக்கும் தடுப்பூசி ஏற்றுவதற்கான வேலைத்திட்டம் சுகாதாரத் துறையினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக இன்று இரவு பத்து மணி முதல் நாடளாவிய ரீதியிலான முடக்கம் இலங்கையில் அமுலாவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை