முடங்கியது வடக்கின் பிரதான நகரம்!
கிளிநொச்சி நகரப்பகுதியில் அனைத்து வர்த்தக செயல்பாடுகளும் முடங்கியுள்ளன. நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தற்பொழுது கிளிநொச்சி மாவட்டத்தில் பல பகுதிகளிலும் அதிக அளவிலான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதையடுத்து கிளிநொச்சி நகரப்பகுதி செயல்பாடுகள் அனைத்தும் முடங்கிய நிலையில் மக்கள் கிளிநொச்சி நகரப் பகுதிகளுக்கு செல்வதனை முடிந்த அளவில் தவிர்த்துக் கொள்ளுமாறும் சுகாதாரநடைமுறைகளை பிற்பற்றுமாறும் மக்களை வர்த்தக சங்கத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை