அறிவித்தலை மீறி நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றத்தை நேரில் பார்க்க வந்த பக்தர்கள்
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
இந்த நிலையில் கொடியேற்றத்தினை நேரில் காண்பதற்காக பல அடியவர்கள் ஆலயத்திற்கு வருகை தந்துள்ளனர்.
தற்போது நாட்டில் நிலவும் கோவிட் தொற்று அச்சுறுத்தல் காரணமாக பக்தர்களை ஆலய சூழலுக்குள் அனுமதிக்க பொலிஸார் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
கொவிட் தொற்று அச்சம் காரணமாக ஆலயத்திற்கு அடியவர்களை வர வேண்டாம் என கோயில் நிர்வாகம் ஏற்கனவே அறிவித்தல் விடுத்திருந்தது.
இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே அப்பகுதிக்கு வந்த சிலர், பொலிஸார் ஆலய சூழலுக்குள் அனுமதிக்க மறுத்ததால் கொடியேற்றம் முடியும் வரையில் வீதிகளில் அமர்ந்திருந்ததை அவதானிக்க முடிந்தது.
கருத்துகள் இல்லை