• Breaking News

    யாழ். பொன்னாலையில் இராணுவத்தின் தாக்குதல் தொடர்பாக விளக்கம் கோரியுள்ளது மனித உரிமைகள் ஆணைக்குழு!

     யாழ். பொன்னாலையில் இராணுவத்தினர் பொதுமக்களை தாக்கிய சம்பவம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியிடம் விளக்கம் கோரியுள்ளது.

    ஆணைக்குழுவின் 16வது உறுப்புரைக்கு அமைய ஆணைக்குழுவின் சொந்த பிரேரணையாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு இந்த விளக்கம் கோரப்பட்டுள்ளது என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் ரீ.கனகராஜ் தெரிவித்துள்ளார்.

    இதன் பிரதி யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad