கொழும்பு போர்ட்சிட்டியில் பணிபுரியும் இலங்கையர் துன்புறுத்தல்?
கொழும்பு துறைமுக நகர திட்டத்தில் பணிபுரியும் இலங்கையர்கள் தேவையில்லாமல் துன்புறுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
இரண்டு கோவிட் டோஸ்களையும் பெற்ற பின்னர் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே வீட்டுக்குச் செல்ல வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், பணிக்குத் திரும்பும்போது 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையர்களுக்கு இது போன்ற சட்டம் நடைமுறையில் இருந்தாலும், சீன ஊழியர்கள் இரவு நேரங்களில் கொழும்பில் உள்ள மசாஜ் பார்லர் மற்றும் சூதாட்ட விடுதிகளுக்கு செல்ல வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை சீனர்களும் துறைமுக நகர திட்டத்தில் பிசிஆர் செய்வதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை