• Breaking News

    நிர்வாண பூஜை நடத்தி பெண் பலமுறை வல்லுறவு

     நிர்வாண பூஜை நடத்தினால் பணம் அதிகம் கிடைக்கும் என்று ஆசைவார்த்தை கூறி இளம்பெண் ஒருவரை பலமுறை பாலியல் வல்லுறவுக்குட்படத்தியதாகக் கூறப்படும் போலி சாமியார் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேரையும் இந்திய மகாராட்டிர மாநிலத்தின் நாசிக் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    போலி சாமியாரை கைது செய்த கந்துபூர் பொலிஸார் அவரிடம் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட சாமியார் தனது 2 உதவியாளர்களுடன் அந்த பெண்ணை கடந்த 7 மாதங்களாக சித்திரவதை செய்துள்ளார்.

    சாமியாரின் உதவியாளர்கள் இருவரும் பாதிக்கப்ப்ட்ட பெண்ணின் கணவருக்கு முதலில் அறிமுகமாகியுள்ளார்.

    இதையடுத்து, அதிக பணம் சம்பாதிக்க வேண்டுமானால் சாமியார் சொல்லும் பரிகாரங்களை செய்தால் உங்கள் வீட்டில் செல்வம் செழிக்கும் என்று ஆசைவார்த்தை கூறியுள்ளனர்.

    சாமியாரின் பூஜை நடத்தும் போது பாதிக்கப்பட்ட பெண் ஆடைகளை கழைந்து நிர்வணமாக அமர வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளனர். இவ்வாறு நிர்வணமாக இருந்த பெண் சாமியாரால் பலமுறை வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

    மேலும் கடந்த 7 மாதங்களாக அவர் பல சித்திரவதைகளை அனுபவித்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    அத்துடன், இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது சம்பந்தம் உள்ளதா, வேறு பல பெண்களையும் சாமியார் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளாரா என்று பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad