• Breaking News

    காரைநகர் - ஊர்காவற்றுறை இடையிலான கடற்பாதை போக்குவரத்து மீண்டும் ஆரம்பம்

     காரைநகர் - ஊர்காவற்றுறை இடையிலான கடற்பாதை போக்குவரத்து இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

    குறித்த கடற்பாதையானது பழுதடைந்துள்ள நிலையில் இருந்ததனால் சில வாரங்களாக அதன் திருத்த வேலைகள் நடைபெற்றன. இதனால் காரைநகர் - ஊர்காவற்துறை இடையிலான கடற்பாதை போக்குவரத்து சில வாரங்கள் தடைப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் கடற்பாதையின் திருத்தப் பணிகள் யாவும் தற்போது பூர்த்தியாகிய நிலையில் அதன் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

    குறித்த இரு பகுதிகளையும் இணைக்கும் கடற்பாலம் ஒன்று மிகவும் அவசியமாக இருப்பதனால் கடற்பாலம் ஒன்று அமைப்பது தொடர்பான கோரிக்கையை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad