• Breaking News

    தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் வவுனியாவில் பரவலாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்

     வவுனியா நகரின் பல பகுதிகளிலும் இலவசக் கல்வியை சீரழிப்பதற்கான மிலிட்டரி பொறியமைப்பினை வகுக்கின்ற கொத்தலாவல பிரேணையை சுருட்டிக்கொள் என்ற வாசகத்துடனான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

    குறித்த சுவரொட்டிகளுக்கு கொத்தலாவல பிரேரணைக்கு எதிரான கூட்டு நிலையம் என உரிமை கோரப்பட்டுள்ளது.

    தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

    வவுனியா நகரின் குறிப்பாக நூலக வீதி, ஏ9 வீதி, புகையிரத நிலைய வீதி, மன்னார் வீதி, நகர் மத்தி, ஹொரவப்பொத்தானை வீதி ஆகிய பகுதிகளில் இந்த சுவரொட்டிகளை அவதானிக்க முடிகிறது.




    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad