கடனை திருப்பி செலுத்தவில்லை என யாழினைச் சேர்ந்த ஒருவரை வெள்ளைவான் மூலம் கடத்த முற்பட்ட வவுனியாவைச் சேர்ந்த கும்பல் கைது!
கடனாக வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்காததால் குடும்பஸ்தரை வெள்ளை வானில் கடத்த மேற்கொள்ளப்பட்ட சதி முறியடிக்கப்பட்டுள்ளதுடன் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவமானது இன்று இடம் பெற்றுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வவுனியா - மகாரம்பைகுளம் பகுதியில் உள்ள குடும்பஸ்தர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒருவரிடம் ஒரு தொகை பணத்தை கடனாகப் பெற்றிருந்தார். கடனைப் பெற்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் குறித்த கடனை திருப்பி செலுத்தவில்லை.
இந்த நிலையில் கடன் பெற்றவர் தனது மனைவி பிள்ளைகளுடன் வவுனியா நகர் நோக்கி முச்சக்கரவண்டியில் சென்றிருந்தார். இதன்போது வவுனியா இலுப்பையடி சந்தியில் அவரை வழிமறித்த சில நபர்கள் அவரது மனைவியையும் பிள்ளையையும் அவ்விடத்தில் விட்டுவிட்டு வெள்ளை வான் ஒன்றில் கடன் பெற்றவரை கடத்திச் சென்றுள்ளனர்.
அவரைக் கடத்திச் சென்ற வாகன இலக்கத்தை குறித்துக் கொண்ட மனைவி வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதன்போது விரைந்து செயற்பட்ட வவுனியா பொலிஸார் குறித்த வானையும் குடும்பஸ்தரையும் வானில் இருந்த 6 பேரையும் வெளிக்குளம் பகுதியில் வைத்து மடக்கிப் பிடித்துள்ளனர்.
இதனை அடுத்து வானும் கைது செய்யப்பட்டவர்களும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்ல பட்டுள்ளதுடன் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை