யாழில் கொரோனா விழிப்பூட்டல் நடவடிக்கை
யாழ்ப்பாணம் முஸ்லிம் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், கொரோனா சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிப்பது தொடர்பில் விழிப்புணர்வு வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது முகக் கவசங்கள், கொவிட் சுகாதார நடைமுறைகள் தொடர்பான விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டன.
யாழ்ப்பாணம் முஸ்லிம் கல்லூரி வீதியில் முஸ்லிம் ஒன்றிய உறுப்பினர்களால் குறித்த விழிப்புணர்வு செயற்பாடு இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.
கொவிட் – 19 இல் இருந்து – எங்களையும் எங்கள் நாட்டு மக்களையும் பாதுகாப்போம், வீட்டை விட்டு வெளியேறும் போது முகக்கவசம் அணிந்து செல்வோம், கைகளை கழுவுவோம் என்ற பல விழிப்புணர்வு விடயங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களும் வீதியால் பயணித்த மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.
கருத்துகள் இல்லை