முடங்குகிறது நாடு- வெளியான முக்கிய அறிவிப்பு!
நாட்டில் தற்போது கட்டுக்கடங்காது அதிகரிக்கும் கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பபட்டுள்ளது.
அதனடிப்படையில், இன்று இரவு 10 மணி முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது என சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் நிலைமை காரணமாக இந்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை