அராலி மத்தி கடற்றொழில் சங்கத்தின், மீன் ஏலம் விடும் கட்டடத்தை உடைத்த விஷமிகள்
அராலி மத்தி அம்பாள் கடற்றொழில் சங்கத்தின் மீன் ஏலம் விடப்படும் கட்டடத்தினை இனம்தெரியாத நபர்கள் உடைத்தெறிந்துள்ளனர். அத்துடன் அக் கட்டடத்தின் பூட்டுகளையும் உடைத்துள்ளனர்.
அக் கட்டடத்திற்கு சுமார் 150 மீட்டர் தொலைவிலுள்ள வீடு ஒன்றும் எரியூட்டப்பட்டுள்ளது. வீடு எரிந்ததை அவதானித்த வீட்டு உரிமையாளர் விரைந்து செயற்பட்டு தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்.
இவ்விரண்டு சம்பவங்களும் நேற்றைய தினம் (16) இரவு 11.30க்கு பின்பே இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துகள் இல்லை