• Breaking News

    நல்லூர் ஆலய கொடிச்சீலைக்கான காளாஞ்சி மரபு முறைப்படி கையளிப்பு!

     நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு, கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்றைய தினம் காலை 9 மணியளவில் நடைபெற்றது.

    வள்ளியம்மை திருக்கல்யாண படிப்புடன் பந்தல்கால் நடுதல் நடைபெற்று, பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களுக்கான காளாஞ்சி மற்றும் மகோற்சவ பத்திரிகை என்பன நல்லூரிலிருந்து கல்வியங்காட்டுக்கு, மாட்டுவண்டி மூலம் எடுத்துச் செல்லப்பட்டு கொடிச்சீலை செய்பவர்களிடம் கையளிக்கப்பட்டது.

    ஆலயத்தின் வருடார்ந்த மகோற்சவமானது எதிர்வரும் 13ம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad