யாழ். நகுலேச்சரத்தில் ஆடி அமாவாசை விரதம்
இந்துமக்களால் அனுஷ்டிக்கப்படும், பிதாவினை இறந்தவர்களுக்கான ஆடி அமாவாசை விரத உற்சவமானது யாழ். மாவட்டத்தில் உள்ள சிவன் ஆலயங்களில் அனுஷ்டிக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில் ஆடி அமாவாசை விரத உற்சவம் இன்று, வரலாற்று சிறப்புமிக்க யாழ். கீரிமலை நகுலேஸ்வர ஆலயத்தின் தீர்த்தகேணியில் இடம்பெற்றது.
குறித்த கிரியைகளை ஆலயபிரதம குரு சிவ ஸ்ரீ இ.குமாரசாமி மற்றும் சிவ ஸ்ரீ இரத்தினசபாபதி ஆகிய குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் நடாத்தினர்.
கருவறையில் அருள்பாலித்து விளங்கும் ஸ்ரீ நகுலேஸ்வரர், சமேத நகுலாம்பிகை மற்றும் பரிவாரத் தெய்வங்களுடன் உள்வீதி மற்றும் வெளிவீதி ஊடாக வலம்வந்து, கீரிமலைக் கேணியில் நகுலேஸ்வரப் பெருமான் நீராடியபின்பு, கீரிமலை கேணியின் மடத்தில் வீற்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பக்தர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தமது பிதிர் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றியும்,நீராடியும் வழிபாட்டு, அகல்விளக்கேற்றி வணங்கினர்.
குறித்த சுகாதார நடைமுறைகளை வலி. வடக்கு பிரதேச சபையினர்கள் மற்றும் பொதுச்சுகாதார பரிசோதர்கள் கண்காணித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை