• Breaking News

    யாழில் பெருமளவான தொகை கஞ்சாவுடன் மூவர் கைது!

     இன்று அதிகாலை 2 மணியளவில், யாழ். தொண்டைமானாறு பகுதியில் வைத்து சுமார் 168 கிலோ எடையுடைய கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கடற்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கைது செய்யப்பட்டவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

    கடற்படையினரின் விசாரணைகளின் பின்னர் அவர்கள் காங்கேசன்துறை போலீசாரிடம் கையளிக்கப்பட உள்ளனர்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad