யாழில் அரசுக்கு எதிரான போராட்டம் முன்னெடுப்பு!
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் ஒன்று யாழில் இன்று புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
யாழ். பல்கலைக்கழக சமூகத்தினால், பல்கலைக்கழக நுழைவாயிலின் முன்னால் குறித்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள இலவச கல்வி முறையை பாதுகாக்க, கல்வியானது இராணுவ மற்றும் தனியார் மயமாக்கப்படுவதை தடுக்க, கல்வித்துறையில் ஏற்படும் அரசியல் தலையீடுகளை தவிர்க்க இத்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சுகாதார விதிமுறைக்கு அமைய நடைபெற்ற இப் போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை