இந்திய மீனவர்கள் மீது இலங்கை இராணுவம் துப்பாக்கிச்சூடு; ஒருவர் காயம்
கோடியக்கரைக்கு அப்பாலுள்ள கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகப்பட்டினம் மீனவர் ஒருவர், இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் காயம் அடைந்துள்ளார்.
நாகப்பட்டினம்- கீச்சாங்குப்பம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து அக்கரைப்பேட்டையைச் கலைச்செல்வன் உள்ளிட்ட 10 பேர் விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்றிருந்தனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கே 5 கடல் மைல் தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி துப்பாக்கியால் சுட்டதாக படகில் இருந்த மீனவர்கள் தெரிவித்தனர்.
இதில் கலைச்செல்வன் என்பவருக்கு தலையில் இடதுபக்கம் காயம் ஏற்பட்டது. இதனால் மீனவர்கள் நாகப்பட்டினம் துறைமுகத்திற்குத் திரும்பியுள்ளனர். காயம் அடைந்த கலைச்செல்வன் நாகப்பட்டினம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கருத்துகள் இல்லை