• Breaking News

    இலங்கையில் கொரோனா மரணம் ஐயாயிரத்தை தாண்டியது!

     இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5000தை தாண்டியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

    நேற்றைய தினம் மேலும் 98 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவான நிலையில், கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5017ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஆய்வு பிரிவை மேற்கோள்காட்டி அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

    இவ்வாறு உயிரிழந்தவர்களில் 78 ஆண்களும் 20 பெண்களும் அடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad