யாழில் சக்திவாய்ந்த வெடிபொருட்கள் மீட்பு!
யாழ். இராசாவின் தோட்டம் பகுதியில் சக்தி வாய்ந்த வெடிபொருட்கள் நேற்றைய தினம் (2021.08.14) மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இராசாவின் தோட்டம் பகுதியில் அமைந்துள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியில் இருந்தே குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட வெடிபொருட்களில் மிதிவெடிகள் மற்றும் கைக்குண்டுகள் என்பன அடங்குகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வெடிபொருட்களை மீட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை