வேலணையில் இரு கடற்றொழில் பண்ணைகள் டக்ளஸ்ஸினால் திறந்துவைப்பு!
இன்றையதினம் (2021.08.11), வேலணை வடகிழக்கு பகுதியில் இரண்டு கடற்பண்ணைகள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் திறந்து வைக்கப்பட்டது.
குறித்த இரு பண்ணைகளும் அமைப்பதற்கு கடந்த மூன்று வருடங்களாக முன்னெடுக்கப்பட்ட முயற்சியில் இன்று அவை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளன.
அவற்றில் ஒரு பண்ணை நண்டு உற்பத்திக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இப்பண்ணையில், சுமார் 27 ஏக்கர் பரப்பில் 30 இலட்சம் ரூபா நிதியில் ocean aqua farm நிறுவனமானது உற்பத்தியை மேற்கொள்ளவுள்ளது.
மற்றைய பண்ணையில் இறால் உற்பத்தி மேற்கொள்ளப்படவுள்ளது. இப்பண்ணையில் அன்னை அன் சன்ஸ் நினுவனமானது சுமார் 144 ஏக்கர் பரப்பில் 720மில்லியன் ரூபா நிதியில் உற்பத்தியை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை