சத்தம் சந்தடியின்றி அனுமதியளிக்கப்பட்ட மற்றுமொரு விலை அதிகரிப்பு
சுமார் 60 அத்தியாவசிய மற்றும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் மருந்துகளின் விலையை ஏறக்குறைய 10 சதவிகிதம் அதிகரிக்க மருந்தகங்களுக்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளது.
கடந்த 19 ஆம் திகதி சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் கையொப்பத்துடன் வெளியான வர்த்தமானி அறிவித்தலில் இந்த விலை அதிகரிப்புக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே கொரோனா நெருக்கடி நேரத்தில் அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் மருந்துப் பொருட்களின் விலைகளையும் அரசாங்கம் அதிகரிக்க அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை