மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் மூவர் படுகாயம்
கல்முனை -அக்கரைப்பற்று பிரதான வீதியில் காரைதீவு கிராமிய தொழிற்பயிற்சி நிலையத்திற்கு முன்னால் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மூவர் பலத்த காயமடைந்த நிலையில், நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .
இச்சம்பவம் நேறு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன்போது அக்கரைப்பற்றில் இருந்து கல்முனை நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் எதிர் திசையில் வந்து கொண்டிருந்த மற்றும் ஓர் மோட்டார் சைக்கிகளுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக தெரியவருகின்றது.
இது குறித்த மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை