நடுவானில் தீ பிடித்து வெடித்துச் சிதறிய விமானம் - ரஷ்யாவில் பயங்கரம்
ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவிலுள்ள குபின்கா என்ற நகருக்கு அருகே அந்நாட்டு விமான படைக்குச் சொந்தமான ஐஎல்-112 வி ரக விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்த நிலையில திடீரென தீ பிடித்துள்ளது விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
குறித்த விமானத்தில் 3 பேர் இருந்ததாக தெரியவந்துள்ளது.
பின்னர் குறித்த விமானம் தீ பிடித்தபடியே சிறிது தூரத்துக்கு தாழ்வாக பறந்து, அங்குள்ள ஒரு வனப்பகுதிக்குள் விழுந்துள்ளதுள்ளது.
தரையில் மோதிய வேகத்தில் அடுத்த சில நொடிகளில் விமானம் வெடித்துச் சிதறியதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இச்சம்பவத்தினால், இதில் வானுயரத்திற்கு கரும்புகை மண்டலம் எழுந்ததுடன், குறித்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை