செம்பருத்தி சீரியல் நடிகைக்கு நிச்சயார்த்தமே முடிந்துவிட்டதா? புகைப்படத்தை கண்டு ஆடிப்போன ரசிகர்கள்!
செம்பருத்தி சீரியலில் ஹீரோயினாக நடித்து வருபவர் ஷபானா. அவர் நடித்து வரும் பார்வதி கதாப்பாத்திரத்திற்கு அதிக அளவு ரசிகர்கள் உள்ளனர்.
மேலும், இன்ஸ்டாகிராமில் அவருக்கு ஆறு லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரது புகைப்படங்களுக்கு குறைந்தது 50 ஆயிரம் லைக்குகள் குவிகிறது.
இதையடுத்து, பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் ரோலில் நடித்து வரும் ஆர்யனை ஷபானா காதலித்து வருகிறார். அது பற்றிய தகவல் சில மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானதில் இருந்து 'எப்போது திருமணம்?' என்ற கேள்வியை தான் ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.
ஆனால், அது பற்றி அவர்கள் இதுவரை வாய்திறக்காமல் இருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது ஷபானா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதலர் கையை பிடித்து கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதை பார்த்த ரசிகர்கள் ஷபானா - ஆர்யன் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை