யாழில் கொரோனா தொற்றினால் மேலும் மூன்று மரணங்கள் பதிவு!
யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி மேலும் மூவர் மரணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்தவகையில் திருநெல்வேலி சந்தைக்கு அண்மித்த பகுதியைச் சேர்ந்த 68 வயதான ஆண் ஒருவரும், கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த 65 வயதான பெண்ணொருவரும் மற்றும் சுன்னாகத்தை சேர்ந்த யாழ். பல்கலைக்கழக ஊழியர் ஒருவருமே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.
கருத்துகள் இல்லை