களவு போன நகை வட்டுக்கோட்டை பொலிஸாரால் மீட்பு
கடந்த 4ஆம் திகதி, வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டு மேற்கு கண்ணகி அம்மன் கோயிலுக்கு அருகாமையில் உள்ள வீட்டில் நகை திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக நேற்றைய தினம் (2021.08.06) சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் திருடிய இரண்டரை பவுண் நகையில் அரைப்பவுண் நகையை நேற்றைய தினமே பொலிசாரிடம் கையளித்துள்ளார்.
மிகுதி 2 பவுண் நகை நிதி நிறுவனம் ஒன்றில் அடகு வைக்கப்பட்டிருந்த நிலையில் அதனையும் மீட்டு இன்றைய தினம் (2021.08.07) தங்களிடம் கையளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை