யாழில் பிறந்து நான்கு நாட்களே ஆன குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி!
யாழ். போதனா வைத்தியசாலையில் பிறந்து நான்கு நாட்களேயான பெண் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வடக்கு மாகாணத்தில் நான்கு குழந்தைகளுக்கு covid-19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி யாழ். போதனா வைத்தியசாலையில் பிறந்து 4 நாட்களேயான பெண் குழந்தைக்கும், நான்கு வயதான ஆண் குழந்தை ஒன்றுக்கும், கிளிநொச்சி அக்கராயனில் பிறந்த 10 மாதங்களான குழந்தை ஒன்றுக்கும் மற்றும் மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் ஒரு வருடமும் 10 மாதமுமான குழந்தைக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துகள் இல்லை