• Breaking News

    காமெடி சூரி ரெட்டை பிறவியா? பலருக்கு தெரியாத ரகசியம்... லீக்கான தம்பியின் புகைப்படம்

     தமிழ் சினிமாவில் மிகவும் அடிமட்டத்தில் இருந்து தற்போது உயரத்திற்கு வந்திருப்பவர் தான் நடிகர் சூரி.

    ஆரம்ப காலத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து எப்படியாவது சினிமாவில் முன்னேற வேண்டும் என்ற வெறியுடன் தனது திறமையால் இன்று முன்னணி காமெடி நடிகராக உருவாகியுள்ளார்.  

    இந்நிலையில் நேற்று பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் சூரிக்கு திரைபிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

    ஆனால் சூரியோ அவரது சகோதரருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது பேஸ்புக் பக்கத்தில் சூரி கூறியுள்ளதாவது, ”ஒரே வயிற்றில் ஒரே நேரத்தில் ரெட்டை பிள்ளையாய் எனக்கு அடுத்து பிறந்தவன் லெட்சுமணன்.

    உழைப்பிலும் திறமையிலும் உயர்ந்தவன். என்னைவிட புகழ் பெற்றிருக்க வேண்டியவன். முந்திப் பிறந்ததால்தான் இந்த முன்னேற்றம் என்றால், உனக்குப் பின்னால் பிறந்திருப்பேன் தம்பி.

    அடுத்த ஜென்மத்தில் நீயே அண்ணனாக பிறக்க வேண்டுகிறேன். பிறந்தநாள் வாழ்த்துகள் தம்பி” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad