பொலிஸாரிடமிருந்து தப்பிக்க போதைப் பொருள் பொதியை விழுங்க முயற்சித்த இராணுவ சிப்பாய்!
பொலிஸாரிடமிருந்து தப்பித்துக்கொள்ள தன்னிடம் இருந்து ஹெரோயின் பைக்கட்டுக்களை விழுங்க முயற்சித்த இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார் என்று மொரட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மொரட்டுவ - எகடஉயன பொலிஸ் சோதனைச் சாவடிக்கு அருகில் இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
முச்சக்கர வண்டியில் சென்ற இராணுவ சிப்பாய் பொலிஸ் சோதனை சாவடியை கண்டதும் முச்சக்கர வண்டியில் இறங்கி செல்ல முயற்சித்துள்ளார்.
இதன்போது பொலிஸார் சந்தேகத்தில் அவரை பிடித்த போது கையில் இருந்த ஹெரோயின் பைக்கட்டுக்களை விழுங்க முயற்சித்துள்ளார்.
எனினும் பொலிஸார் அதனை தடுத்து சந்தேகநபரான இராணுவ சிப்பாயை கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை