யாழ். பல்கலைக் கழக ஊழியர்கள் பணி புறக்கணிப்பு தொடரும் - சிவரூபன் தெரிவிப்பு!
யாழ். பல்கலைக் கழக ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் கோரிக்கை செவிசாய்க்கப்படும்வரை பணிப்புறக்கணிப்பு தொடரும் என யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தலைவர் த.சிவரூபன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ் பல்கலைக்கழக ஊழியர் ஒருவர் கொரோனாத் தொற்றினால் நேற்றுமுன்தினம் (11) உயிரிழந்துள்ளார்.
பல்கலைக்கழகத்தின் பல்வேறு பிரிவுகளிலும் இருந்தும் தொற்றாளர்கள் அதிக அளவில் இனங்காணப்பட்டுள்ளனர்.
எனினும் அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் எதுவித பொறுப்புமற்ற வகையில் செயற்படுவது தெளிவாக தெரிகின்றது.
இத்தகைய நிலைமையை கருத்தில் கொண்டு பல்கலைக்கழக ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும் சுழற்சிமுறையில் ஊழியர்களை பணிக்கு அழைக்க கோரியும் நேற்று (12) பணிவிடுப்பு அறிவிக்கப்பட்டிருந்தது.
குறித்த விடயம் தொடர்பில் இன்று பல்கலைக்கழக நிர்வாகத்துடன் கலந்துரையாடவும் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் தயாராக இருந்தது.
எனினும் பல்கலைக்கழக நிர்வாகம் இது குறித்து இதுவரையில் செவிசாய்க்கவில்லை.
எவ்வாறாயினும் தமது கோரிக்கைகள் கவனத்திற் கொள்ளப்படும் வரை தாங்கள் பணி புறக்கணிப்பில் தொடர்ந்து ஈடுபட உள்ளதாக சிவரூபன் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை