• Breaking News

    எந்தவொரு தருணத்திலும் நாடு முடக்கப்படலாம் - அரசாங்கம் அதிரடி அறிவிப்பு

     எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சுகாதார அமைச்சு பரிந்துரை செய்தால் பொது முடக்கமொன்றை அறிவிப்பதற்குப் பின்வாங்கப் போவதில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

    அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கின்ற வாராந்த ஊடகச் சந்திப்பு அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (18) முற்பகலில் நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்டு உரையாற்றிய ஊடகத்துறை அமைச்சர் அமைச்சரவை பேச்சாளர் டளஸ் அழகப்பெரும இதனைத் தெரிவித்தார்.

    கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் நாட்டை முடக்கம் செய்யக்கூடாது என்ற பிடிவாதமான தீர்மானத்தில் அரசாங்கம் இல்லையெனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad