அரசாங்கமே அப்பாவி மக்களை சாகடிக்கிறது - சஜித் சாடல்
நாட்டை உரிய காலத்தில் முடக்காமல் அரசாங்கம் திமிருடன் செயற்பட்ட காரணத்தினாலேயே கொரோனா தொற்று தீவிரமடைந்து உயிரிழப்புக்களின் எண்ணிக்கை உச்சமடைந்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
நாளாந்தம் 200இற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றினால் மரணிக்கின்றார்கள். ஆனால் அரசாங்கமோ அப்பாவி மக்களை சாகடித்துக் கொண்டு உலக நாடுகளிடம் கடன் பெற்றுக் கொள்கின்றது எனவும் அவர் கடுமையாக சாடியுள்ளார்.
கருத்துகள் இல்லை