வேலணையில் இறால் பண்ணை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்புப் போராட்டம்!
வேலணை பகுதியில் அமைக்கப்படவுள்ள நவீன இறால் பண்ணைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
தீவக கடற்றொழில் அமைப்புகள், பொது அமைப்புகள் மற்றும் கடற்றொழிலாளர்கள் இனைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
வேலணை வடகிழக்கு ஜே/13 கிராம அலுவலர் பிரிவில் அன்னை அன் சன்ஸ் (வரையறுக்கப்பட்ட) தனியார் நிறுவனத்தின் நவீன இறால் பண்ணைத் திட்டம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் கடந்த 11ஆம் திகதி வைபவ ரீதியாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
குறித்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே இன்றையதினம் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை