• Breaking News

    திருமணம் எப்போது என கேட்ட ரசிகர்: ஸ்ருதிஹாசனின் தடாலடி பதில்

     எப்போது திருமணம் என்ற ரசிகரின் கேள்விக்கு நடிகை ஸ்ருதி ஹாசன் தடாலடியாக பதில் அளித்துள்ளார்.

    நடிகர் கமல் ஹாசனின் மூத்த மகள் நடிகை ஸ்ருதிஹாசன். குழந்தை நட்சத்திரமாக சினிமாவுக்கு அறிமுகமானார். இசையமைப்பாளர், பின்னணி பாடகர் என பல முகங்களை கொண்டுள்ளார் ஸ்ருதி ஹாசன்.

    1992ஆம் ஆண்டு வெளியான தேவர்மகன் படத்தில் பின்னணி பாடகியாக கேரியரை தொடங்கினார் ஸ்ருதிஹாசன். 2000 ஆம் ஆண்டில் வெளியான ஹேராம் படத்தில் கேமியோ அப்பியரன்ஸ் கொடுத்தார் ஸ்ருதிஹாசன்.

    இந்தியில் வெளியான லக் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். இந்தப் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் ஸ்ருதிஹாசன். தொடர்ந்து தெலுங்கில் அனகனகா ஓ தீருது என்ற படத்தில் நடித்து அறிமுகமானார். இந்தப் படத்தில் நடிகர் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்தார் ஸ்ருதிஹாசன்.

    தமிழில் 7ஆம் அறிவு படத்தின் மூலம் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார் ஸ்ருதி ஹாசன். இந்தப் படத்தில் சைன்ட்டிஸ்ட் மாணவியாக சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார் ஸ்ருதி ஹாசன். ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.

    டாப் நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வரும் ஸ்ருதி ஹாசன், முன்னணி நடிகையாகவும் வலம் வருகிறார். தற்போது விஜய் சேதுபதியுடன் லாபம் மற்றும் பிரபாஸுடன் சலார் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள ஸ்ருதி ஹாசன் அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார்.

    அவர் படு கிளாமராக வெளியிடும் போட்டோக்களும் வீடியோக்களும் இணையத்தில் அவ்வப்போது வைரலாகி வருகிறது. நடிகை ஸ்ருதி ஹாசன் அவ்வப்போது காதல் சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். முன்பு லண்டனைச் சேர்ந்த மைக்கேல் கார்சேலை என்ற நாடக கலைஞரை காதலித்து வந்தார் நடிகை ஸ்ருதி ஹாசன்.

    ஆனால் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக 2019ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். இதனை தொடர்ந்து மீண்டும் காதலில் விழுந்தார் நடிகை ஸ்ருதி ஹாசன். ஸ்ருதி ஹாசன் தற்போது சாந்தனு என்பவரை காதலித்து வருகிறார். தான் மீண்டும் காதலில் விழுந்திருப்பதாக ஸ்ருதி ஹாசனும் தெரிவித்திருந்தார்.

    இருவரும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களும் வீடியோக்களும் அடிக்கடி சமூக வலைதள பக்கத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அண்மையில் தக் லைப் என ஸ்ருதி ஹாசனின் வயிற்றில் அவரது காதலர் எழுதியிருந்த வீடியோ இணையத்தை திணறடித்தது. அதனை பார்த்த நெட்டிசன்கள் உங்களுக்கு எழுதுவதற்கு வேறு இடமே கிடைக்கவில்லையா என சாடியிருந்தனர்.

    பிரபாஸுடனான சலார் படத்தின் லேட்டஸ்ட் ஷெட்யூலை நிறைவு செய்த ஸ்ருதி ஹாசன் தன்னுடைய மும்பை வீட்டிற்கு திரும்பினார். சமீபத்தில் மும்பையில் தனது தந்தை கமல்ஹாசனையும் சந்தித்தார் ஸ்ருதிஹாசன். தனது காதலர் மற்றும் தந்தையுடன் நீண்ட நேரத்தை செலவழித்தார் ஸ்ருதி ஹாசன்.

    சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்ட்டிவ்வாக உள்ள ஸ்ருதி ஹாசன், நேற்று ஆஸ்க் மீ எனித்திங் என்ற செஷனில் ரசிகர்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சந்தித்தார். அப்போது ரசிகர் ஒருவர் எப்போது திருமணம் செய்து கொள்ள போகிறீர்கள் என்று கேட்டார். 

    அதற்கு தடாலடியாக பதில் அளித்துள்ளார் ஸ்ருதி ஹாசன். "நான் முற்றிலும் நேர்மையாக இருக்கப் போகிறேன் என்று நினைக்கவில்லை. மேலும் இதிலிருந்து நாம் முன்னேற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன். இது 2021.. இப்போது உலகில் அதிக அழுத்தமான பல பிரச்சனைகள் உள்ளன. பல எரியும் கேள்விகள் உள்ளன. எனவே, அமைதி." இவ்வாறு வீடியோவில் ரசிகருக்கு பதில் அளித்துள்ளார் ஸ்ருதி ஹாசன்.

    ஸ்ருதிஹாசன் இந்த ஆண்டு ரவி தேஜாவின் கிராக் மற்றும் பவன் கல்யாணின் வகீல் சாப் ஆகிய இரண்டு படங்களில் நடித்தார். இரண்டு படங்களும் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது. தமிழில் விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடித்துள்ளால் ஸ்ருதிஹாசன். அந்தப் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad