விடுவிக்கப்பட்ட போராளிகளின் நடவடிக்கை பார்த்துத்தான் ஏனையோரையும் விடுவிப்போம் - யாழில் சவேந்திர சில்வா தெரிவிப்பு
விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள்சமூகத்தில் நடந்து கொள்ளும் முறையைப் பார்த்தேசிறையில் உள்ள ஏனைய முன்னாள் போராளிகளையும் விடுவிக்க முடியும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்துக்கான நிதி உதவி வழங்கும் வைபவத்தில் கலந்துகொண்டு விடுவிக்கப்பட்ட போராளிகளுடன் உரையாடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்
கடந்தகாலத்தைபோல் இனியும் பிழையான வழியில் செல்லாது சரியான பாதை நோக்கி நல்வழியில் பயணியுங்கள் .
பழையவற்றை மறந்து நல்லதை சிந்தித்து சமூகத்தில் உள்ளோர் உங்களை நல்லவர்கள் என்று சொல்லும் அளவுக்கு உங்களது வாழ்க்கையை கொண்டு செல்லுங்கள்.
அவ்வாறு இருந்தால்தான் சிறையில் இருக்கும் ஏனையோரையும் விடுவிக்க கூடியதாக இருக்கும்.
உங்கள் விடுதலையைப் பற்றி பார்க்கிறார்கள் அவதானிக்கிறார்கள் எனவே நீங்கள் சமூகத்தில் நல்லவர்களாகச் செயற்பட வேண்டும்.
நீங்கள் முன்னாள் போராளிகள் நீங்கள் எமக்கு எதிராகத்தான் சண்டையிட்டீர்கள். அதையெல்லாம் மறந்து இராணுவத்தினர் ஆகிய நாம் உங்களுக்கு உதவி செய்ய தயாராக இருக்கின்றோம்.
வீடு கட்டித் தருவது என்றாலும் சரி, வேறு ஏதாவது உதவி என்றாலும் நாங்கள் அதை செய்யத் தயாராக உள்ளோம். ஏனென்றால் அது எமது கடமையாகும். உங்களை எமது சகோதரர்களாகப் பார்க்கின்றோம்.
கருத்துகள் இல்லை