கொரோனா தொற்றிய பிரபல ஊடகவியலாளர் வைத்தியசாலையில் இருந்து தப்பியோட்டம்
கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பிரபல பத்திரிகை ஒன்றின் ஆசிரியர்களில் ஒருவரான கீர்த்தி வர்ணகுலசூரிய, தான் சிகிச்சை பெற்று வந்த களுபோவில வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொரோனா தொற்றாளர்கள் என அடையாளம் காணப்பட்ட பின்னர், கீர்த்தி வர்ணகுலசூரிய மற்றும் அவரது மனைவி ஆகியோர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மனைவியை வைத்தியசாலையில் தனியே விட்டு விட்டு, கீர்த்தி வர்ணகுலசூரிய அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதன் பின்னர் பொலிஸார் தேடிய போது, அவர் தலங்கமவில் உள்ள ஊடகவியலாளர்களுக்கான வீடமைப்பு தொகுதியில் அவரது வீட்டில் மறைந்திருந்த போது சிக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பத்திரிகையில் பாதுகாப்பு சம்பந்தமான செய்திகளை எழுதும் கீர்த்தி வர்ணகுலசூரிய, செவ்வாய் கிரகத்தில் செங்கல் கிடைத்தது என பரப்பரப்பான செய்தியை வெளியிட்ட ஊடகவியலாளர்.
அத்துடன் ஐரோப்பா உட்பட வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்களை, கீர்த்தி வர்ணகுலசூரிய, புலம்பெயர்ந்த புலிகள் என்றே தனது செய்திகளில் எழுதுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை