யாழில் மாபெரும் வாகனப் பேரணி!
இன்றைய தினம் யாழில் இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் மாபெரும் வாகனப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொத்தலாவல சட்ட மூலத்தை நிறுத்துமாறும், இலவச கல்வியை தனியார் மற்றும் ராணுவ மயப்படுத்த வேண்டாம் என்று கூறியும், ஆசிரியர்களின் சம்பளத்தை சுரண்ட வேண்டாம் என தெரிவித்தும் குறித்த வாகனப் பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வாகனப் பேரணியின் இடையே பொலிஸார் குறுக்கிட்டுயை இப்பேரணி நிறுத்துமாறு கூறி குழப்பம் விளைவித்தனர். இருப்பினும் தடைகள் அனைத்தையும் உடைத்தெறிந்து இப்பேரணி வெற்றிகரமாக நிறைவு முன்னெடுக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை