நெஞ்சை உருக்கும் மற்றுமொரு பதிவு -மருத்துவமனை பிரேத அறைகளில் குவிந்துள்ள கொவிட் சடலங்கள்
இலங்கையில் அண்மைய சில நாட்களாக கொரோனா தொற்றின் வேகம் தீவிரம் அடைந்த நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்கள் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரித்துள்ளது.
அத்துடன் மருத்துவமனை விடுதிகளில் நோயாளர்கள் தங்க இடமின்மையால் நடைபாதைகளிலும் வைத்தியசாலை வெளிப்புற புற்தரைகளில் நோயாளர்கள் படுத்துறங்கும் காட்சிகள் சமுக வலைத்தளங்களில் வெளியாகி மனதை நெருடச் செய்தன.
நோயாளர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் வேகத்துக்கேற்ப கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புக்களும் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது.
இந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளிலும் சவச்சாலைகளில் உடல்கள் குவிவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த வகையில் சமூக வலைத்தளங்களில் கொழும்பு பொலிஸ் சவச்சாலையில் காணப்படுகிற தற்போதைய நிலைமை குறித்த புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை