சவுக்கடி பகுதியில் உள்ள காடுகளுக்கு தீ வைப்பு!
மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பிரிவுக்குட்பட்ட சவுக்கடி பகுதியில் உள்ள காடுகளுக்கு அடையாளம் தெரியாத நபர்களினால் தீ வைக்கப்பட்டுள்ளதனால் அதனைக் கட்டுப்படுத்தும் செயற்பாடுகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இன்று பிற்பகல் சவுக்கடியில் உள்ள கோட்டை முனை விளையாட்டு மைதானத்திற்கு முன்பாகவுள்ள சவுக்கு காட்டுப்பகுதியிலேயே இச்சம்பவம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது தீ வேகமாகப் பரவி வருவதன் காரணமாக அவற்றினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
சிலர் இப்பகுதிகளில் காணி அபகரிப்பினை நோக்காகக் கொண்டு இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
கடற்கரையினை அண்டிய பகுதியில் எதிர்காலத்தில் கடல் அரிப்பினை தடுக்கும் நோக்குடன் அமைக்கப்பட்டுள்ள இந்த காடுகளுக்குத் தீவைத்து அழிக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்போர் குறித்து கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை